வலைப்பூ உருவாக்கமும் தமிழ் மின் உள்ளடக்க மேம்பாடும் (Blog creation and Tamil e-content development) எனும் பாடம் வலைப்பூ உருவாக்கும் வழிமுறைகளைக் கூறுகின்றது.
இப்பாடத்தில் எழுத்துப் பயிற்சி (Tamil writing), வலைப்பூ அறிமுகம் (Introduction to Blogs), தள அமைப்பு (Site structure), பதிவு எழுதுதல் (Writing Post), தள வடிவமைப்பு, கருத்துரை தருதல், வலைத்தளங்களில் பதிவைக் கொண்டு சேர்த்தல், கூகுள் சர்ச் கன்சோல் (Google Search Console), கூகுள் அனாலிடிக்சு (Google Analytics) போன்ற விரிவான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் எனச் சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும்.
இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
சில நிறுவனங்கள் சாதாரண இணையப் பயனரும் இலகுவாகப் பயன்படுத்தும் வகையில் இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன. வலைப்பதிவுகளைத் தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.
அடிக்கடி இற்றைப்படுத்தப்படல் பெரும்பாலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றுக்குமான பொது இயல்பாக அவை அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதைச் சொல்லலாம்.
புதிய பதிவுகளை, ஆக்கங்களை அடிக்கடி வலைப்பதிவாளர்கள் தம் வலைப்பதிவுகளில் வெளியிடுவர்.
சில வலைப்பதிவுகள் தனி நபர்களின் சொந்த நாட்குறிப்பேடுகளாகக்கூட உள்ளன.
இலக்கு வாசகர்கள் அநேகமான வலைப்பதிவுகள், வாசகர்களை இலக்காகக் கொண்டே எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு வலைப்பதிவுகளுக்கும் சிறப்பான ஒரு வாசகர் வட்டம் இருக்கும்.
வாசகர் ஊடாட்டம் தொழில்நுட்ப அடிப்படையில் வாசகர் ஊடாடுவதற்கென வலைப்பதிவுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது எதிர்வினையை, கருத்துக்களை மறுமொழிகளாக உடனடியாகவே அவ்வலைப்பதிவில் பதிவு செய்துகொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும்.
மறுமொழிகளை அடுத்து வரும் வாசகர்கள் பார்க்கக்கூடியதாயிருக்கும்.
தேவையேற்படும் பட்சத்தில் மறுமொழிகள் விடயத்தில் வலைப்பதிவாளர் மட்டுறுத்தல்களையும் மேற்கொள்ள முடியும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வலைப்பூவை உருவாக்கும் வழிமுறைகளை இப்பாடம் தங்களுக்குத் தரும்.
The lesson on Blog creation and Tamil e-content development tells you how to create a blog.
This course covers extensive dialogues such as Tamil writing, Introduction to Blogs, Site structure, Writing Post, Site design, Commenting, Posting on websites, Google Search Console, and Google Analytics.