எல்லாருக்குமே GST தமிழில் படிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசை இருக்கும் அல்லவா?
இந்த கோர்ஸ் அதை தான் செய்யப்போகிறது.
பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) - எளிமையாக்குவதே இந்த கோர்ஸ்யின் நோக்கம்.
தமிழ் மொழியில் பொருட்கள் மற்றும் சேவை வரியின் அடிப்படைகள் - இந்த ஆன்லைன் பாடநெறிகளுக்கு உங்களை வரவேற்கிறோம்.
இந்த பாடத்திட்டத்தில் தமிழ்மொழியில் பொருட்கள் மற்றும் சேவை வரியின் அடிப்படைகளைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். இந்த ஒன்லைன் கோர்ஸ் தமிழில் சொல்லி தரப்பட்டாலும் ஆங்கில பாட புத்தகமே பயிற்றுவிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது (Even though lectures are available in Tamil, English based background material is used throughout the course)
சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 அறிமுகமாகிறது.
ஜிஎஸ்டி என்பது ஒரு புதிய திட்டம் அல்ல. அது 1954ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், பல நாடுகள் இந்த திட்டத்தை பின்பற்றி, தற்போது இது ஒரு உலகளளவில் பயன்படுத்தப்படும் ஒருதிட்டமாக உள்ளது.
இந்த ஒன்லைன் கோர்ஸ் மூலமாக நீங்கள் கற்று கொள்ள போவது.
1. வரி - அடிப்படைகள்.
2. நேரடி மற்றும் மறைமுக வரி.
3. பொருட்கள் மற்றும் சேவை வரியின் அம்சங்கள்.
4. இந்தியாவில் ஜிஎஸ்டியின் ஆதியாகமம்.
5. இந்தியாவில் ஜிஎஸ்டி பற்றிய கருத்து.
6. இந்தியாவில் ஜிஎஸ்டியின் தேவை.
7. ஜிஎஸ்டி
8. ஜிஎஸ்டி சட்டமன்ற கட்டமைப்பு.
9. பொருட்கள் மற்றும் பதிவு வகைப்பாடு.
10. கலவை திட்டம் மற்றும் விலக்குகள் (Composition Scheme & Exemptions).
11. ஜிஎஸ்டி கிரெடிட்டின் ஓட்டம் - இன்ட்ரா ஸ்டேட் சப்ளை
12. ஜிஎஸ்டி கிரெடிடின் ஓட்டம் - மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல்
13. ஜிஎஸ்டி காமன் போர்டல்
14. ஜிஎஸ்டி சுவிதா
15. ஜி.எஸ்.டி.இழப்பீட்டு செஸ்
16. ஜிஎஸ்டி - பொருந்தக்கூடியது மற்றும் பொருந்தாதது
17. ஜி.எஸ்.டி. கீழ் உட்படுத்தப்பட்ட வரிகள்
18. ஜிஎஸ்டியின் நன்மைகள்
இந்த ஒன்லைன் பாட திட்டம் சுயமாக பார்த்து கேட்டு படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை எடுப்பதற்கு,கம்ப்யூட்டர் / மொபைல் ஃபோன் மூலம் நல்ல இணைய இணைப்பு தேவை. திறம்பட இந்த பாடத்திட்டத்தை கேட்க,நான் உங்கள் ஹெட்ஃபோனை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.
CA / CMA / CS / MBA / B Com / M Com படிக்கும் மாணவர்களுக்கு இந்த கோர்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மீண்டும் இந்த பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
Note:
இந்த ஒன்லைன் கோர்ஸ் தமிழில் சொல்லி தரப்பட்டாலும் ஆங்கில பாட புத்தகமே பயிற்றுவிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது (Even though lectures are available in Tamil, English based background material is used throughout the course)