தொடரடைவு (Concordance) என்பது பொதுவாக ஒரு நூலில் அல்லது உரையில் இடம்பெறும் சொற்கள் அவற்றின் சூழமைவு (context) அல்லது அவை இடம்பெறும் சொற்தொடர்களோடு அகரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் ஆகும். கணினி வழியிலான தேடலுக்கு முன்பு, முக்கிய படைப்புக்களுக்கு தொடரடைவுகள் வெளியிடப்பட்டன. கணினியின் வருகைக்குப் பின்பு தொடரைவுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வற்கான கருவிகள் பரந்த பயன்பாட்டுக்கு வந்துள்ளன (விக்கிப்பீடியா குறிப்பு).
அதுபோல் சொல்லடைவு குறித்தும், பொருளடைவு குறித்தும், தொடரடைவு குறித்தும் மிகச் சுருக்கமாக நமக்கு வழங்குகிறார் முனைவர் பா. ஜெய்கணேஷ் (இளமாறன்).
பயன்பாட்டு நோக்கில் சொல்லடைவு, பொருளடைவு, தொடரடைவு (Terminology, Semantics, Concordance in terms of application) எனும் பாடப்பொருளின் ஆசானாக முனைவர் பா. ஜெய்கணேஷ் (இளமாறன்) அவர்கள் அமைகின்றார். இவர், துறைத்தலைவராகத் தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியாவில் பணியாற்றி வருகின்றார்.
இவர் பன்னாட்டளவில் பல்வேறு ஆய்வுரைகளை வழங்கியவர்.
இத்தகுத் திறன் படைத்த இவ்வாய்வாளர் இப்பொருண்மையில் பாடம் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
அவர் உடேமியில் பாடம் வழங்க அனுமதி நல்கியமைக்கு நன்றி.
இப்பாடத்தில் சொல்லடைவு, பொருளடைவு, சொற்பொருளடைவு, தொடரடைவுப் பற்றி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனைக் கற்று அறிவோ அகராதியியல் சார்ந்த அறிவைப் பெறுவதோடு, அதில் தொடர்ந்து ஆய்வுகள் செய்யவும் வழிகாட்டுகின்றார்.
இப்பாடத்தின் இறுதியில் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடல்களும் உள்ளன.
இது இப்பொருண்மை சார்ந்த அறிவை மேலும் வளப்படுத்திக்கொள்ள உதவும்.
தொடரடைவுகள் சார்ந்த ஆய்வுகள் பெருகும்பொழுது வரும் பயன்கள் வருமாறு;-
ஒரே சொல்லின் வெவ்வேறு வகையான பயன்பாடுகளை அறிதல்
வேர்சொல் சார்ந்த ஆய்வுகள்
சொற்கள் கையாளப் படும் வீதம்
வாக்கிய அமைப்புகளை கண்டறிதல் மற்றும் வகைப்படுத்துதல்
இவை தவிர கணினி மொழியியல் துறையில் பயன்பாடுகளாவன:
தேடு பொறிகள் உருவாக்கம்
சொல் வளத்தை சிறப்பாக பயன்படுத்தல்
இந்திய மொழிகளில் சிறப்பான தரவுதளங்களை உருவாக்குதல்
துல்லியமான தேடுபொறிகளை உருவாக்கி பயன்படுத்துதல்
சொல் மற்றும் இலக்கண திருத்திகளின் பின்புலமாக(பேக் எண்ட்) பயன்படுத்துதல்
இம்முறைதான் தமிழ் போன்ற மொழிகளில் உரை ஆய்வு எனப்படும் டெக்ஸ்ட் அனாலிஸஸ் செய்வதற்கு சரியான முறையாகும்.
மேலும் தொடரடைவு சரியாகப் பயன்படுத்தப் பட்டால் எந்திர மொழிமாற்றம் வரை பயன்படக்கூடியது (பார்வை - கட்டுரை - இந்திய மொழிகளில் கன்கார்டன்ஸ் - தொடரடைவு கருவிகளின் அவசியம்).
Concordance is a list of words that usually appear in a text or text, alphabetically with their context or with the phrases they contain. Prior to the computerized search, sequels to key works were published. Since the advent of the computer, tools for easy retrieval of contacts have come into widespread use (Wikipedia reference).
Similarly, Dr. B. Jaiganesh gives us a very brief description of the terminology, the semantics, and the Concordance.
As an instructor of Terminology, Semantics, and Concordance in terms of application, Dr. B. Jaiganesh (Ilamaran) sets them up. He is the Head of the Department of Tamil Department, SRM. He has been working at University, of Kattankulathur, Chennai, Tamil Nadu, India.
He has authored various dissertations internationally.
It is welcome that this talented reviewer has taught a lesson in this field.
Thank you for allowing him to teach at Udemy.
In this lesson, he has introduced terminology, semantics, Concordance, and continuity.
He guides those who learn this to acquire lexical knowledge and to do continuous research on it.
There are also discussions with researchers at the end of this lesson.
This will help in further enriching the relevant knowledge.