Rating 4.65 out of 5 (13 ratings in Udemy)
What you'll learn
- Everything you always wanted to know about Transactional Analysis is provided here in a nutshell. Almost all the topics in Transactional Analysis are covered in simple, easy to understand Tamil for the benefit of Tamil speaking population everywhere in the world.
Description
பரிமாற்றப் பகுப்பாய்வு - A முதல் Z வரை – தமிழில், சுருக்கமாக :
இந்தப் பரிமாற்றப் பகுப்பாய்வுப் பாடநெறி எல்லா முக்கியத் தலைப்புகளையும் உள்ளடக்கியது. உலகளாவிய …
Rating 4.65 out of 5 (13 ratings in Udemy)
What you'll learn
- Everything you always wanted to know about Transactional Analysis is provided here in a nutshell. Almost all the topics in Transactional Analysis are covered in simple, easy to understand Tamil for the benefit of Tamil speaking population everywhere in the world.
Description
பரிமாற்றப் பகுப்பாய்வு - A முதல் Z வரை – தமிழில், சுருக்கமாக :
இந்தப் பரிமாற்றப் பகுப்பாய்வுப் பாடநெறி எல்லா முக்கியத் தலைப்புகளையும் உள்ளடக்கியது. உலகளாவிய TA 101 பாடத் திட்டத்தில் – Covers the International Standard Syllabus of TA 101 Basic course - சொல்லித் தர வேண்டிய எல்லாமும் இங்கே சுருக்கமாகத் தரப் படுகின்றன
எல்லாப் பாடங்களுமே எளிய தமிழில் உள்ளன. இதில் பங்கேற்பவர்கள் எளிதாய்ப் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் வாழ்க்கை தொடர்பான எடுத்துக் காட்டுகள் ஏராளமாகத் தரப்பட்டுள்ளன.
TA எனப்படும் இந்த அற்புதமான மனவியலை உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் குறிக்கோள்.
ஒவ்வொரு தனிமனிதனும் சரி, அவனுக்கு அல்லது அவளுக்கு தனிப்பட்ட மதிப்பு மற்றும் கண்ணியம் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். Every single individual has dignity and worth.
பரிமாற்றப் பகுப்பாய்வு உங்கள் உள் மன நிலைகளையும் - Ego States - அவை உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்துகின்றன என்பதையும் புரிந்து கொள்ள உதவும்.
உங்கள் 3 கட்டமைப்பு ஈகோ மன நிலைகளை – three Structural Ego States - பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்: 'பெற்றவர், பெரியவர் மற்றும் குழந்தை' – Parent, Adult and Child
உங்கள் 5 செயல்பாட்டு ஈகோ மன நிலைகளை – Five Functional Ego States - நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். இவை ஐந்தும் : 'கண்டிப்பான பெற்றவர், கனிவான பெற்றவர், பெரியவர், இயல்பான குழந்தை மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் குழந்தை' – Controlling Parent, Nurturing Parent, Adult, Free Child and Adapted Child.
உங்கள் ‘பழகுமுறைப் பரிமாற்றங்களை' – Transactions and Communications with others - திறம்படப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கை மேலும் பயன் உள்ளதாக அமையும்.
இந்த பாடநெறி உங்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் நீங்கள் சரியான முறையில் சிந்திக்கவும், உணரவும், செயல்படவும் வழிவகுக்கும் – to think, feel and act.
உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும், பொருத்தமான, இணையான ஈகோ மன நிலைகளைப் பயன்படுத்தி - using the appropriate and expected ego state in a given situation - நீங்கள் உடனிருக்கும் மக்களுடன் இணைந்து செயல்பட, உங்கள் உறவுகளை, நட்பை மேம்படுத்த முடியும்
உங்கள் மன ஆற்றல்களை உங்கள் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப நன்கு பயன் படுத்துவீர்கள்.
எல்லா நேரங்களிலும் உங்களை சமநிலையில் வைத்திருக்க, 'இன்பக் கோட்பாடு, ஒழுக்கக் கோட்பாடு மற்றும் நடப்பியல் கோட்பாடு' - Pleasure Principle, Morality Principle and Reality Principle - குறித்து நீங்கள் நன்கு அறிந்து கொள்வீர்கள்.
Injunctions - ‘இன்ஜங்க் ஷன்ஸ்' எனப்படும் உங்களுக்கு உள்ளேயே உள்ள மனத்தடைகளை – Mental Blocks - நீங்கள் புரிந்துகொள்வீர்கள், அவற்றைக் கடந்து செல்லத் தேவையான இசைவுகளை - Permissions - உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்வீர்கள்.
உங்களுடைய பார்வையில் 'நான் சரியில்லை, மற்றவர்கள் சரியில்லை ' என்பது போன்ற ‘வாழ்க்கை நிலைகள்- Life positions stating, 'I am not OK or Others are not OK' - எவையேனும் இருந்தால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு விரைவில் அவை போன்ற பார்வைகளை நீங்களே மாற்றிக் கொள்ளலாம்.
‘நானும் நன்றாக இருக்கிறேன், நீங்களும் நன்றாக இருக்கிறீர்கள், மற்றவர்களும் நன்றாகத் தான் இருக்கிறார்கள்’ – I am OK, You are OK, Others are OK - என்கிற நமக்கும், மற்றவர்களுக்கும், எல்லோருக்கும் பயன் தருகிற 'சரி-சரி' - OK-OK உறவுகளை நோக்கி நகரத் தொடங்கலாம்.
நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் நாமே நம் வாழ்க்கைக் கதையை மாற்றி எழுதலாம். We can rewrite our own Life Scripts.
உங்கள் வாழ்க்கையை வழி நடத்துகிற ‘டிரைவர்களை’ – Drivers are ideas that drive your life - நீங்கள் அடையாளம் காண முடியும் :
‘எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்யுங்கள், வலிமையானவராக இருங்கள், கடினமாக முயற்சி செய்யுங்கள், விரைந்து செல்லுங்கள், மற்றவர்களை மகிழச் செய்யுங்கள்' – Five Drivers that drive our lives : 'Be Perfect, Be Strong, Try Hard, Hurry Up and Please Others' - இவை டிரைவர்களாக உங்கள் வாழ்க்கையை ஓட்டிச் செல்கின்றன. மேலோட்டமான பார்வையில் இவை நல்லவை போலக் காட்சி அளித்தாலும், அவை உண்மையில் உங்கள் மகிழ்ச்சிக்கு உதவக் கூடியவை அல்ல.
எந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் உங்களைச் சுற்றி ஒரு ‘முக்கோண நாடகம்' – Drama Triangle - நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். இந்த நாடகத்தில் ஒருவர் அடிப்பவராகவும், இன்னொருவர் அடி வாங்குபவராகவும், மற்றொருவர் காப்பாற்றுபவர் ஆகவும் – Persecutor, Victim and Rescuer - பங்கு பெறுவார்கள். இந்த நாடகம் தொடங்கும் முன்பாகவே நீங்கள் இதனை அடையாளம் கண்டு கொண்டு விலகி நிற்க முடியும்.
உடன் இருப்பவர்களுக்கும், நமக்கும் எதிர்மறையான உணர்வுகளை, வருத்தங்களை விளைவிக்கும் ‘விளையாட்டுகள் - Games, resulting in two people parting company with negative, bad or sad feelings - எனப்படும் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் இந்த விளையாட்டை விளையாடாமல் தவிர்க்கலாம்.
உலகம் எவ்வாறு இருக்கிறது என்பது உங்கள் பார்வையின் கோணத்தை – Your Frame of Reference - பொறுத்தே அமைகிறது. உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற, உடன் இருப்பவர்கள் பற்றிய, உலகைப் பற்றிய - Your frame of reference about Yourself, Others and the World at large - உங்கள் பார்வையின் கோணங்களை நீங்களே மாற்றிக் கொள்ளலாம்.
உங்கள் பிரச்சினைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடக் கூடும் – You may tend to discount your problems. எனக்குப் பிரச்சினைகளே இல்லை என்று சொல்வதோ, என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் மிகவும் சாதாரணமானவை என்று சொல்வதோ, என் பிரச்சினைகளுக்கு யாராலும் தீர்வு காண முடியாது என்று சொல்வதோ, என்னுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய திறமை எனக்கு இல்லை என்று சொல்வதோ உங்களுக்கு உதவாது – Refusing to accept the existence of your problems, or their significance, or their solvability or your personal ability to solving them.
எனக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன, அவை முக்கியத்துவம் வாய்ந்தவை, அவை தீர்வு காணக் கூடியவை, என்னால் அவற்றுக்குத் தீர்வு காண முடியும் என்கிற மன நிலையை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். Accepting the fact that I have problems, they are significant, they are solvable and I can solve them.
உங்களுடைய ‘போலியான உணர்வுகளையும், உண்மையான உணர்வுகளையும்' – You will recognize your Racket feelings and Genuine, Authentic feelings - நீங்களே அறிந்து கொள்வீர்கள். மேலும் உங்கள் உண்மையான உணர்வுகளை முறையாக வெளிப்படுத்தத் தெரிந்து கொள்வீர்கள்.
தபால் தலைகள் சேகரிப்பதைப் போல எதிர்மறை உணர்வுகளைத் தேடித் தேடி சேகரிப்பதை நிறுத்தி விடுவீர்கள். இதற்கு முன் சேகரித்த உங்களுக்கு உதவாத எதிர்மறை உணர்வுகளையும் தூக்கி எறிந்து விடுவீர்கள்.
நீங்கள் யாரையும் ‘முழுக்க முழுக்க சார்ந்து’ – symbiotically dependent and can’t exist or live without the other - இருக்க மாட்டீர்கள். உங்களுடைய எல்லா ஈகோ மன நிலைகளையும் முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்கள் முற்றிலுமாக உங்களைச் சார்ந்து இருக்கவும் அனுமதிக்க மாட்டீர்கள்.
உங்கள் நேர நிர்வாகத்தை ‘தனித்திருத்தல், சடங்குகள், பொழுதுபோக்கு, செயல் படுதல், விளையாட்டுகள், நெருக்கமான உறவுகள்' – Withdrawals, Rituals, Pastimes, Activities, Games, Intimacy - என வகைப்படுத்தி நீங்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்வீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியுடன் ‘மற்றவர்களைப் பாராட்டுவீர்கள், உங்களுக்குத் தரப்படும் பாராட்டுகளை விரும்பி வரவேற்பீர்கள், பிறர் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள், நீங்கள் செய்த சிறந்த செயல்களுக்காகப் பாராட்டுகளைக் கேட்டுப் பெறுவீர்கள், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வீர்கள்.
நிறைவாக, இந்தப் பயிற்சிகளின் மூலமாக நீங்கள் ஓர் உயர்ந்த நிலையில் இருந்து உங்களையே பார்த்துக் கொள்ளவும், - you can see yourself from a high pedestal - புரிந்து கொள்ளவும் முடியும். மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் வாழ்க்கைப் பாதையை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள் !
TA என்பது உங்கள் ஆளுமை வளர்ச்சி, தனிப்பட்ட வளர்ச்சி, உறவுமுறை மகிழ்ச்சிக்கான - tool for Personality development, Personal development, improving your inter-personal relationships - சிறந்த கருவியாக அமையும்.
முக்கியக் குறிப்பு - Disclaimer :
இந்தப் பாட நிறை அல்லது பயிற்சி வகுப்பு, ' தன்னிலை வளர்ச்சி, பழகுமுறை, ஆளுமைத் திறன், உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்' பற்றிய பயிற்சியாகும்.
இந்தப் பயிற்சி மன நல வளர்ச்சி தொடர்பானது. மனம் தொடர்பான ஆலோசனையோ, மருத்துவமோ அல்ல .
மனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு - ஆலோசனைகள், கவுன்சலிங், தெரபி தேவைப் படுபவர்கள் - முறையாகப் பயிற்சி பெற்ற மன நல ஆலோசகர்கள், மற்றும் மன நல மருத்துவர்களை - Psychologists, Psychotherapists, TA Therapists, Psychiatrists - தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
Paid
Self paced
All Levels
Tamil
38
Rating 4.65 out of 5 (13 ratings in Udemy)
Go to the Course